பொதுமக்கள் தங்களது முக்கிய ஆவணங்களை பாதுகாப்பாக டிஜிட்டல் வடிவில் சேமித்து வைத்துக் கொள்வதற்காக டிஜி லாக்கர் வசதியை மத்திய அரசு அறிமுகப்படுத்தி இருக்கிறது. டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் ஒரு பகுதியாக கொண்டுவரப்பட்ட இந்த டிஜி லாக்கரில் மக்கள் தங்களது அடையாள அட்டை ஆவணங்கள், பென்ஷன் சான்றிதழ்கள், சான்றிதழ் போன்ற பல்வேறு ஆவணங்களை சேகரித்து வைத்துக் கொள்ளலாம்.
இந்த நிலையில் டிஜி லாக்கருடன் பார்ட்னர் நிறுவனமாக பென்ஷன் ஒழுங்குமுறை ஆணையமான PFRDA இணைந்திருக்கிறது. இதன்படி பென்ஷன் ஒழுங்குமுறை ஆணையமானPFRDA டிஜி லாக்கர் வாயிலாக புதிய சேவைகளை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி டிஜி லாக்கர் வாயிலாக ஓட்டுனர் உரிமத்தை பயன்படுத்தி தேசிய பென்ஷன் திட்டத்தின் கீழ் கணக்கு தொடங்கிக் கொள்ளலாம்.
ஓட்டுநர் உரிமம் வைத்து பென்ஷன் கணக்கு தொடங்குவது எப்படி..?
* https://enps.nsdl.com இணையதளத்திற்கு செல்ல வேண்டும்.
*அதில் digilocker வாயிலாக புதிதாக பதிவு செய்ததற்கான பகுதியை கிளிக் செய்ய வேண்டும் அதில் ஓட்டுனர் உரிமத்தை தேர்வு செய்யவும்.
*இப்போது டிஜி லாக்கர் இணையதளம் திறக்கும். அதில் உள்ளே நுழையவும்.
*டிஜி லாக்கர் மற்றும் ஆவணங்களை பயன்படுத்த என் பி எஸ் க்கு அனுமதி அளிக்கவும்.
*பான் கார்டு எண் தனிநபர் விவரங்கள் வங்கி கணக்கு எண் போன்ற விவரங்களை பதிவிட வேண்டும்.
*நாமினேஷன் முடித்து இதர விவரங்களை பூர்த்தி செய்ய வேண்டும்.
*தேசிய பென்ஷன் திட்டத்திற்கான பங்களிப்பு தொகையை செலுத்தவும்.
*உங்கள் தேசிய பென்ஷன் திட்ட கணக்கு தொடங்கப்பட்டு விடும்.