Categories
மாநில செய்திகள்

ஓட்டுநர் உரிம சேவைகள்…. இனி ஆன்லைனிலேயே…. அமைச்சர் சொன்ன ஹேப்பி நியூஸ்…!!!

சட்டப்பேரவையில் நேற்று மாலை நடந்த போக்குவரத்துத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின்போது திருத்துறைப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் மாரிமுத்து, தொழிலாளர்களுக்காக பாடுபட்ட ஜீவானந்தம் புகைப்படத்தை சட்டப்பேரவையில் வைக்கவேண்டும், போக்குவரத்து ஊழியர்களுக்கு ஊதியத்தை உயர்த்தி வழங்க வேண்டும்,  போக்குவரத்து வளர்ச்சி நிதி நிறுவனம் மூலமாக ஊதியத்தை உயர்த்தி கொடுக்க வேண்டும் என்று பல்வேறு கோரிக்கைகளை வைத்தார்.

இதற்கு போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் பதிலளித்து பேசினார். மேலும் பல அறிவிப்புகளையும் வெளியிட்டார். அந்தவகையில் பொதுமக்கள் ஓட்டுனர் உரிமம் சேவைகளை இனி ஆன்லைனிலேயே பெறும் வசதி ஏற்படுத்தப்படும் என்று  அறிவித்துள்ளார். ஆதாரை பயன்படுத்தி ஆர்டிஓ அலுவலகத்திற்கு நேரில் வராமல் சேவைகளை பெறலாம். மேலும் புதிதாக 2,213டீசல் பேருந்துகள் மற்றும் 500 மின்சார பேருந்துகள் கொள்முதல் செய்யப்படும். அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் உள்ள காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும் என்று கூறியுள்ளார்.

Categories

Tech |