ஓட்டுனர் போல நடித்து இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கனடாவில் உள்ள லங்லேவில் வசிப்பவர் ஹிர்டிபால் பாத் (24). இவர் போன மாதம் ஆகஸ்ட் 20 ஆம் தேதி ஒரு பெண்ணிடம் சென்று தான் கார் ஓட்டுனர் என பொய் கூறியுள்ளார். அதன் பின்னர் அந்தப் பெண்ணை வலுக்கட்டாயமாக பிடித்து இழுத்து காருக்குள் அடைத்து வைத்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இது குறித்த புகாரின் பேரில் காவல்துறையினர் அவரை கைது செய்து, அவரது காரையும் கைப்பற்றியுள்ளனர்.
கைது செய்யப்பட்ட ஹிர்டிபால் பாத் மீது சமீப காலமாக பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் இவர் குறித்த பல முக்கியமான தகவல்களை காவல்துறையினர் வெளியிட்டுள்ளனர். அதில், “ஏற்கனவே 2017ம் ஆண்டு ஹிர்டிபால் பாத் மீது பலாத்கார வழக்கு உள்ளது. இவரால் எந்த பெண்ணாவது பாதிக்கப்பட்டிருந்தாலோ அல்லது இவரைப் பற்றிய தகவல் யாருக்கும் தெரிந்தாலோ காவல் துறையினரிடம் தெரிவிக்கலாம்” என்று கூறியுள்ளனர்.