Categories
தேசிய செய்திகள்

ஓட்டுனரின் கவனக்குறைவால்…. பிஞ்சுக்குழந்தைகள் பலியான சோகம்…. அதிர்ச்சி சம்பவம்…!!!

ஆந்திராவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 2 குழந்தைகள் உட்பட 9 பேர் கார் மீது லாரி மோதியதில்  விபத்தில் உயிரிழந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திராவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 2 குழந்தைகள் உட்பட 9 பேர் கார் மீது லாரி மோதியதில்  விபத்தில் உயிரிழந்துள்ளனர். ஆந்திர மாநிலம் அனந்தபுரம்  மாவட்டத்தில் உருவகொண்டா பகுதியில் கார் மீது லாரி மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 2 குழந்தைகள் உட்பட 9 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். இதனால் தகவல் அறிந்த போலீசார் சடலங்களை மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனைப்பற்றி உருவாகொண்டா காவல் துணை ஆய்வாளர் வெங்கடசாமி, இந்த விபத்து ஞாயிற்றுக்கிழமை அன்று நடந்திருக்கிறது. இதில் காரில் சென்ற ஒரே குடும்பத்தை சேர்ந்த அனைவரும் நிம்மக்கல்லுக்கு  திரும்பி கொண்டிருந்தனர். அப்போது எதிரில் அதிவேகமாக வந்த லாரி காரின் மீது மோதி ஓட்டுனர் உட்பட 9 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர் என்று கூறியுள்ளார்.

Categories

Tech |