ஊஞ்சலூரில் அரசு டவுன் பேருந்தை பெண்கள் சிறைபிடித்தார்கள்.
கொடுமுடியில் இருந்து ஈரோட்டுக்கு 43 ஆம் எண் கொண்ட அரசு டவுன் பேருந்து இயக்கப்பட்டு வருகின்ற நிலையில் நேற்று பகல் 11 மணி அளவில் ஈரோட்டில் இருந்து கொடுமுடிக்கு வந்த இந்த பேருந்து ஊஞ்சலூர் அருகே இருக்கும் மணிமுத்தூர் பேருந்து நிறுத்தத்தில் பெண்கள் சிலர் நின்று கொண்டிருக்கும் பொழுது நிற்காமல் சென்றுள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்த பெண்கள் நடந்தே ஊஞ்சலூர் பேருந்து நிறுத்தத்தில் வந்து காத்துக் கொண்டிருந்தார்கள்.
அப்பொழுது கொடுமுடியில் இருந்து ஈரோடு நோக்கி வந்த 43 ஆம் எண் கொண்ட டவுன் பேருந்து ஊஞ்சலூர் பேருந்து நிறுத்தத்தில் வந்தபோது அங்கு காத்திருந்த மணிமுத்தூர் பெண்கள் சிறை பிடித்தார்கள். அப்பொழுது டிரைவரிடம் பேருந்து நிறுத்தத்தில் நாங்கள் நிறுத்த கைகாட்டிய பொழுது ஏன் பேருந்தை நிறுத்தாமல் சென்றீர்கள்? என கேட்டார்கள். இதனால் அங்கு வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து அங்கிருந்த பொதுமக்கள் பேருந்து சிறைப்பிடித்த பெண்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இதையடுத்து பேருந்து ஈரோடு நோக்கி சென்றது.