Categories
தேசிய செய்திகள்

ஓட்டுனர் இல்லாத மெட்ரோ ரயில் சேவை… தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி…!!!

டெல்லியில் ஓட்டுனர் இல்லாமல் இயங்கும் தானியங்கி மெட்ரோ ரயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை 11 மணிக்கு தொடங்கி வைத்துள்ளார்

டெல்லியில் தானியங்கி மெட்ரோ ரயில் சேவையை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்துள்ளார். நாட்டில் பல நகரங்களில் மெட்ரோ ரயில் சேவை வெற்றிகரமாக இயங்கிக் கொண்டிருக்கிறது. நாட்டில் நிலவும் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் மெட்ரோ ரயில் சேவையில் பல புதிய தொழில்நுட்பங்கள் அறிமுகமாகி வருகின்றன. அவ்வகையில் இந்தியாவில் முதல் முறையாக தானியங்கி மெட்ரோ ரயில் சேவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இந்த சேவையில் ஓட்டுனர் இன்றி இயக்கப்படுகிறது. இதனை காணொலிக் காட்சி மூலமாக இன்று காலை 11 மணிக்கு பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்துள்ளார். இந்த நிகழ்ச்சியில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். இந்தியாவின் முதல் தானியங்கி ரயில் சேவை டெல்லியில் இன்று இயக்கப்பட்டுள்ளது. இந்த அதிரடி சேவை பொது மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

Categories

Tech |