Categories
மாநில செய்திகள்

ஓட்டு எனது உரிமை… முதல் நபராக வந்த நடிகர் அஜித்… செல்ஃபி எடுக்க கூடிய ரசிகர்கள்…!!!

வாக்குப்பதிவு தொடங்குவதற்கு 20 நிமிடங்கள் முன்னரே நடிகர் அஜித் தனது மனைவியுடன் வாக்குச்சாவடிக்கு வந்தார்.

தமிழகம் முழுவதும் 234 தொகுதிகளில் மொத்தம் 88,937 வாக்குச் சாவடிகளில் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. 234 தொகுதிகளிலும் 3998 வேட்பாளர்கள் தேர்தல் களத்தில் உள்ளனர். கொரோனா பாதுகாப்பு விதிமுறைகளை முறையாக கடைப்பிடித்து உங்களது ஜனநாயகக் கடமையை நிறைவேற்றுங்கள்.

இந்நிலையில் வாக்கு பதிவு தொடங்குவதற்கு இருபது நிமிடங்கள் முன்னரே தனது மனைவி ஷாலினியுடன் நடிகர் அஜித் வாக்களிப்பதற்காக சென்னை திருவான்மியூரில் உள்ள வாக்குச்சாவடிக்கு வந்துள்ளார். கொரோனா காலம் என்பதால் தன்னை காண கூட்டமாக கூடிய ரசிகர்களை வெளியே செல்ல அஜித் அறிவுறுத்தினார்.

Categories

Tech |