வாக்களிப்பது என்பது நம் நாட்டில் குடி மகனாக பிறந்த ஒவ்வொருவரின் கடமையாக பார்க்கப்படுகிறது. நமது நாட்டில் நடைபெறும் தேர்தல்களில் வாக்குப்பதிவு எண்ணிக்கையானது மிகவும் குறைந்த அளவே பதிவாகி வருகிறது. ஒவ்வொரு முறையும் 100 சதவீதத்தை இலக்காகக் கொண்டு தேர்தல் ஆணையம் செயல்பட்டாலும், தேர்தலில் வாக்குப்பதிவு குறைவாக பதிவாகி வருவது பின்னடைவை ஏற்படுத்துகின்றது. உலகத்தில் அதிக உயரத்தில் உள்ள வாக்குச்சாவடியும், பள்ளத்தாக்கில் உள்ள வாக்குச்சாவடியில் இந்தியாவில்தான் உள்ளது. இந்தியாவில் தேர்தலின் பொழுது மக்கள் அதனை பொது விடுமுறையாக எண்ணி வாக்களிக்காமல் இருந்துவிடுகின்றனர். ஆனால் ஆஸ்திரேலியாவில் வாக்கை செலுத்த தவறினால் அபராதம் மற்றும் ஓட்டுனர் உரிமம் ரத்து செய்யப்படும் என்ற சட்டம் அனைத்து நாடுகளையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது என்று தான் கூற வேண்டும்.
ஆஸ்திரேலியா நாட்டில் பொதுமக்கள் தேர்தலில் வாக்களிக்காமல் இருப்பது குற்றமாக பார்க்கப்படுகின்றது. இதை தடுக்கும் வகையில் அந்நாட்டு தேர்தல் ஆணையம் சட்டம் ஒன்றை இயற்றியுள்ளது. அதன்படி அந்நாட்டு தேர்தலில் வாக்களிக்காமல் இருப்பவர்கள் தகுந்த காரணத்தை தேர்தல் ஆணையத்திடம் தெரிவிக்க வேண்டும். அப்படி தெரிவிக்காவிட்டால் அவர்களுக்கு முதற்கட்டமாக 20 டாலர் அதாவது இந்திய மதிப்பீட்டில் 1400 ரூபாய் அபராதமாக கட்ட வேண்டும். அந்த அபராதத்தை தாமதமாக கட்டுபவர்களுக்கு 150 டாலர் அதாவது 12 ஆயிரம் ரூபாய் அபராதமாக விதிக்கப்படும் என்று அறிவித்துள்ளது.
ஸ்பெயின், நெதர்லாந்து, ஆஸ்திரேலியா, வெனிசுலா, பிஜி தீவுகள் போன்ற நாடுகளில் கட்டாய வாக்களிப்பு முறை நடைமுறையில் இருந்த நிலையில் தற்போது அவை திரும்ப பெற்று விட்டன. இதனிடையே ஆஸ்திரேலியாவில் நடக்கும் மாநில அரசுக்கான தேர்தலில் வாக்களிக்காமல் இருப்பவர்களுக்கு ஓட்டுனர் உரிமம் ரத்து செய்யப்படும் என்றும், அந்த தேர்தல் ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது மற்ற நாடுகளில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.