Categories
மாநில செய்திகள்

“ஓட்டு போடுங்கள் என கேட்கிறேன்”…. அதை யாரும் செய்வதில்லை, இதை மட்டும் செய்வாங்களா?…. நடிகர் சரத்குமார் கேள்வி….!!!

ஆன்லைன் ரம்மி மட்டுமல்ல கிரிக்கெட் கூட சூதாட்டம் தான் என சரத்குமார் தெரிவித்துள்ளார். ஆன்லைன் ரம்மி சூதாட்டம் என கூறப்பட்டு வரும் நிலையில் கிரிக்கெட் கூட ஒரு சூதாட்டம் தான் எனவும் விளையாட்டை வைத்து அனைவரும் சூதாடுகிறார்கள் என சமத்துவ மக்கள் கட்சி தலைவரும் நடிகருமான சரத்குமார் தெரிவித்துள்ளார். ரம்மி அதிகாரப்பூர்வமான விளையாட்டு, அதனை விளையாட அறிவுத்திறன் வேண்டும். ஆன்லைன் ரம்மியில் நான் மட்டும் நடிக்கவில்லை.

ஷாருக்கான் மற்றும் தோனி என அனைவரும் தான் நடிக்கின்றனர். நான் ஒரு அரசியல்வாதியும் கூட, ஓட்டு போடுங்கள் என கேட்கிறேன் ஆனால் எனக்கு மக்கள் ஓட்டு போடுவதில்லை. அப்படி இருக்கும்போது நான் சொன்னால் ரம்மி மட்டும் எப்படி விளையாடுவார்கள் என சரத்குமார் பேசியுள்ளார்.

Categories

Tech |