திண்டுக்கல் மாவட்டத்தில் ரஜினிகாந்த் ரசிகர்களின் சார்பாக ஒட்டப்பட்டுள்ள போஸ்டர் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவாரா என்பது மக்கள் மத்தியில் பெரிய புதிராக உள்ளது. இருந்தாலும் அவரின் ரசிகர்கள் ரஜினிகாந்த் கட்டாயம் அரசியலுக்கு வர வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார்கள். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் ரஜினிகாந்த் உடல்நிலையில் சற்று மாறுபாடு ஏற்பட்டது. அதனால் அவர் அரசியலுக்கு வருவதில் சந்தேகம் எழுந்தது.
அதனால் ரஜினிகாந்த் அரசியலுக்கு வர வேண்டும் என வலியுறுத்தி தமிழகம் முழுவதிலும் உள்ள ரசிகர்கள் சுவரொட்டிகளை ஒட்டினர். அவ்வாறே திண்டுக்கல்லில் உள்ள ரஜினிகாந்த் ரசிகர்கள் ஒட்டிய போஸ்டரில், “எங்களின் இறுதி நம்பிக்கை நீங்கள் மட்டும்தான்… எங்கள் ஓட்டு எங்கள் ஒருவருக்கு மட்டுமே… ஓட்டு போட்டா ரஜினிக்குத்தான்… வா தலைவா வா” என்று அச்சிட்டுள்ளனர். இது திண்டுக்கலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.