தமிழ் திரையுலகின் முன்னணி தயாரிப்பாளரான அன்புசெழியன் மகளின் திருமணத்திற்கு சென்ற பிரபல நடிகர்களான ரஜினி, கமல் உட்பட பலரையும் நெட்டிசன்கள் விமர்சனம் செய்துள்ளார்கள்.
தமிழ்த் திரையுலகின் முன்னணி தயாரிப்பாளர்களில் ஒருவராக அன்பு செழியன் திகழ்கிறார். இவர் பல தயாரிப்பாளர்களுக்கு பணம் கொடுத்து படங்களை தயாரிக்க உதவி செய்து வருகிறார். இவருடைய மகளான சுஷ்மிதாவிற்கு நேற்று திருமணம் நடந்து முடிந்துள்ளது. இதற்கான பத்திரிக்கையை அன்பு செழியன் நேரடியாகவே சென்று ரஜினி ,கமல் உட்பட பல திரையுலகினர்களுக்கு வைத்துள்ளார். அதன்படி நேற்று நடைபெற்ற திருமண விழாவில் யுவன் சங்கர் ராஜா, சிம்பு ரஜினிகாந்த், சிவகார்த்திகேயன் உட்பட பலரும் கலந்து கொண்டுள்ளார்கள்.
இந்நிலையில் நெட்டிசன்கள் அன்பு செழியன் மகளின் திருமணத்தில் கலந்து கொண்ட பலரையும் கடுமையாக விமர்சித்துள்ளார்கள். அதாவது நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் யுவன்சங்கர் ராஜா, ரஜினிகாந்த், சிம்பு, சிவகார்த்திகேயன் போன்றோர் வாக்களிப்பதற்கு வரவில்லை. இந்த சூழ்நிலையிலேயே நெட்டிசன்கள் வாக்களிக்க கூட நேரமில்லாத இந்த பிரபலங்களுக்கு திருமணத்தில் கலந்து கொள்ள மட்டும் நேரமிருக்கிறதா என்று கேள்வி எழுப்பி அவர்களை மிக கடுமையாக விமர்சித்துள்ளார்கள்.