தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. இதற்கு மத்தியில் அரசியல் கட்சியினர் மக்களிடம் நேரடி பிரச்சாரத்தில் இறங்கியுள்ளனர்.
இந்நிலையில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், தீவிரமாக வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார். அந்த வகையில் பிரச்சாரத்தின்போது, “ஓட்டுப்போட போற பொண்ணே ஒதுங்கி நிற்காத. கண்ட கண்ட சின்னம் கண்டு கலங்கி நிற்காத. உழைக்கும் மக்கள் சின்னம், அது விவசாயியின் சின்னம்” என்று பாடல் பாடி பொதுமக்களை கவர்ந்துள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.