திமுக அமைப்புச் செயலாளர் ஆர் எஸ் பாரதி உள்ளாட்சித் தேர்தலில் இரண்டாம் கட்ட வாக்களிப்பு நாளை நடைபெற உள்ள நிலையில் தற்பொழுது தேர்தல் ஆணையத்தில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளார். இந்த புகாரில் அவர் குறிப்பிட்டு இருப்பதாவது, “உள்ளாட்சித் தேர்தல் இரண்டாம் கட்ட வாக்களிக்க காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் உள்ளடங்கிய ஸ்ரீபெரும்புதூர், குன்றத்தூர் ஆகிய இரண்டு ஊராட்சி ஒன்றியங்களிலும் மற்றும் செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்கொளத்தூர் ஒன்றியத்திலும் வெளியிட்டுள்ள வாக்காளர் பட்டியலில் குறிப்பிடப்பட்டிருக்கும் அனைத்து வாக்காளர்களும் தற்காலத் கட்டிட பணிக்காக வந்துள்ள வடமாநிலத்தை சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்துள்ளது.
மேலும் வாக்காளர் பட்டியலில் உள்ள அனைவரும் போலியானவர்கள் என்று தெரிந்து விடும் என்ற காரணத்தினால் துணை வாக்காளர் பட்டியலில் வாக்காளர்களுடைய புகைப்படத்தை இணைக்காமல் வெளியிட்டு உள்ளனர். இதனை தொடர்ந்து துணை வாக்காளர் பட்டியலை முதல் கட்ட தேர்தல் 6. 10. 2010 இல் முடிவடைந்த நிலையில் நேற்று இரண்டாம் கட்ட தேர்தலுக்கு போடப்பட்டிருப்பது சட்டப்படி ஏற்புடையது அன்று. எனவே இந்த போலி வாக்காளர்கள் வாக்களிப்பதற்கான உரிமை கிடையாது. ஆகவே சட்டத்தின் நிலைப்பாட்டின் படி அவர்களை வாக்களிக்க அனுமதிக்க கூடாது.
அதிமுகவால் இந்தத் துணை பட்டியலில் உள்ள வாக்காளர்கள் அனைவரும் போலி வாக்காளர்களாக இணைக்கப்பட்டுள்ளனர். மேலும் தமிழ்நாடு பஞ்சாயத்து சட்டம் 1994, தமிழ்நாடு பஞ்சாயத்து தேர்தல் விதிமுறைகள் 1995 முரணாக எவ்வித ஆதாரமும் இன்றி புகைப்படமும் இல்லாமல் வெளியிடப்பட்டுள்ள இந்த பட்டியலில் உள்ள போலி வாக்காளர்கள் அனைவரையும் இரண்டாம் கட்டத் உள்ளாட்சித் தேர்தலில் வாக்களிக்க தடை விதிக்க வேண்டும். இத்தகையசெயலை தடுத்து தேர்தலை நியாயமான முறையில் நடத்த வேண்டும்” என்று கூறியுள்ளார்.