Categories
அரசியல் மாநில செய்திகள்

ஓட்டு வங்கி ஓட்டு வங்கினு சொல்லுறீங்க…! எல்லாருக்கும் அப்படியா கொடுத்தீங்க… ஒரே போடாக போட்ட தேமுதிக …!!

நேற்று செய்தியாளர்களிடம் பேசிய பிரேமலதா விஜயகாந்த், அதிமுக கூட்டணியில் இருந்து வெளியேறியதும், டிடிவி. தினகரன் அவர்கள் தொடர்பு கொண்டு அவர்களுடன் கூட்டணி வரவேண்டும் என்று பேச்சுவார்த்தையை தொடங்கினார். பேச்சுவார்த்தை நடந்தது சுமூகமாக முடிந்தது, 60 தொகுதிகள் ஒதுக்கப் பட்டிருக்கிறது. 60 தொகுதிகலினுடைய வேட்பாளர் உடனடியாக அறிவிக்கப்பட்டுவிட்டது.

தேமுதிக – அமமுக கூட்டணி மாபெரும் வெற்றிக் கூட்டணி என்று ஒட்டுமொத்த மக்களால் அங்கீகரிக்கப்படும் ஒரு கூட்டணியாக இன்றைக்கு அமைந்து இருக்கிறது. நிச்சயம் இந்த கூட்டணி அமோக வெற்றி பெற்று தமிழக அரசியலில் ஒரு சரித்திரம் படைக்கும் என்பதை இந்த நேரத்தில் நான் உறுதியாக தெரிவித்துக் கொள்கிறேன்.  கடந்த எம்பி எலக்ஷனில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் வாங்கியது 18% வாக்கு.

18 % ஓட்டுக்கு உரிய சீட்டு தான் அவர்கள் எடுத்து இருக்கிறார்களா ? அப்படி என்ற கேள்வியை அண்ணன் எடப்பாடி யாருக்கு கேட்கிறேன். இன்றைக்கு சீட்டு ஒடுக்கப்பட்ட அனைத்து கட்சிகளுமே சதவீதம் வாரியாக தான் கொடுத்து இருக்கிறார்களா? ஏதோ ஒரு காரணத்தை சொல்ல வேண்டும் என்பதற்காக, ஒரு பொய்யான ஒரு தகவலை தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் மேல் சுமத்தி ,இன்றைக்கு கூட்டணி பிரிந்து இன்றைக்கு அந்த ஒரு இக்கட்டான நிலைக்கு கொண்டு சென்றது அண்ணன் எடப்பாடி அவர்கள்தான்  என வேதனையை வெளிப்படுத்தினார்.

Categories

Tech |