தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வரும் வைகை புயல் வடிவேலு ஒரு படத்தில் மது கடைக்கு சென்று மது அருந்துவார். வடிவேலு மது குடித்துக் கொண்டிருப்பதை கவனிக்காத கடை உரிமையாளர் கடைக்குள் வைத்து வடிவேலுவை பூட்டி விட்டு சென்று விடுவார். பின்னர் நள்ளிரவில் வடிவேலு கடை உரிமையாளருக்கு போன் செய்து ஹலோ பிரபா ஒயின் ஷாப் ஓனரா கடையை எப்ப சார் திறப்பீங்க என்று கேட்பார். இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த ஓனர் உடனடியாக கடைக்கு ஓடி வந்தார். ஆனால் வடிவேலு அதற்குள் கடையில் உள்ள கல்லாவில் இருந்த பணத்தை திருடிவிட்டு அங்கிருந்து சென்று விடுவார். மேலும் வடிவேலு படத்தில் நடந்ததை போன்றே தமிழ்நாட்டில் சினிமா பாணியில் ஒரு சம்பவம் அரங்கேறி உள்ளது.
திருவள்ளூர் கவரைப்பேட்டை அருகே டாஸ்மாக் கடை சுவற்றில் ஓட்டை போட்டு உள்ளே நுழைந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தண்டலச்சேரி டாஸ்மாக்கில் கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட சதீஷ், முனியன் ஆகியோர் மது அருந்திக் கொண்டிருந்த போது கைது செய்யப்பட்டனர். pic.twitter.com/xqNd3FQ3wL
— Kᴀʙᴇᴇʀ – தக்கலை ஆட்டோ கபீர் (@Autokabeer) September 4, 2022
அதாவது திருவள்ளுர் மாவட்டம் கவரைப்பேட்டை பகுதியில் மதுபான கடை ஒன்று அமைந்துள்ளது. இந்த கடையின் சுவற்றில் 2 பேர் ஓட்டை போட்டுள்ளனர். அதன்பின் கடைக்குள் சென்று விடிய விடிய மது அருந்துள்ளனர். இதுகுறித்து காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் ஓட்டையின் அருகே நின்று கொண்டு உள்ளே இருந்தவர்களை வெளியே வரும்படி கூறுகின்றனர். அதன்பின் நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு பாம்பு போல் மெலிந்து ஓட்டைக்குள் இருந்த 2 பேரும் ஒரு வழியாக வெளியே வந்தனர். இவர்களிடம் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் சதீஷ் மற்றும் முனியன் என்பது தெரியவந்தது. இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் சதீஷ் மற்றும் முனியனை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இந்நிலையில் சினிமா பாணியில் அரங்கேறியுள்ள இந்த சம்பவம் தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.