விழுப்புதில் நகை கடை சுவற்றில் ஓட்டை போட்டு மர்ம நபர்கள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் குறித்து காவல்துறை வழக்குப் பதிவு செய்து வி-சாரானை நடத்தி வருகின்றார்கள்.
விழுப்புரம் மாவட்டத்தில் அக்பர் நகரில் வசித்து வருபவர் பாலமுருகன். இவரின் நகை கடை பண்ருட்டி அருகில் உள்ள கண்டரக்கோட்டையில் புலவனூர் செல்லும் சாலையில் உள்ளது. ந.வ 2-ஆம் தேதி இரவு கடையை பூட்டிவிட்டு பாலமுருகன் வீட்டுக்கு சென்றுள்ளார். அந்த நேரத்தில் நள்ளிரவு சமயமத்தில் பூட்டிய கடைக்குள் மர்ம நபர்கள் கடையின் சுவற்றில் 1½ அடியின் அகலத்தில் துளை போட்டுள்ளனர்.
பின்னர் இரு தினங்களுக்கு முன்பு காலை கடைக்கு வந்துள்ளார் பாலமுருகன். அப்போழுது சுவரில் ஓட்டை போடப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சியில் உள்ளே சென்று பார்த்தபோழுது கடையில் உள்ள டி.வி.கண்காணிப்பு கேமராவில் தங்க நகைகள், வெள்ளி பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது. பின்பு பாலமுருகன் பண்ருட்டி காவல்துறையினரிடம் புகார் செய்துஉள்ளார். புகாரின் அடிப்படையில் காவல்துறை வழக்குப் பதிவு செய்து திருடர்களை தேடிவருகின்றார்கள்.