சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் மாணவ-மாணவிகள் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு வாக்காளர்கள் கட்டாயம் வாக்களிக்க வேண்டும். தமிழக அரசு சார்பிலும், தேர்தல் ஆணையம் சார்பிலும் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சிங்கம்புணரி பேருந்து நிலையத்தில் தேர்தல் விழிப்புணர்வு பதாகைகளுடன் மூன்றாவது படிக்கும் மாணவன் வருண், மாணவி வர்ணா, மாணவி நிகிலன் ஆகியோர் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
மேலும் நியாயமாக வாக்களியுங்கள், ஓட்டுக்கு பணம் வாங்காதீர்கள், பணத்திற்காக ஓட்டை விற்காதீர்கள், உங்கள் எதிர்காலத்தை எண்ணி வாக்களியுங்கள், ஓட்டை விற்பதும் நாட்டை விற்பதும் ஒன்றுதான், யாருக்கு ஓட்டு போட வேண்டும் என்பதை நீங்களே தீர்மானியுங்கள் என்று கூறி பொதுமக்களிடையே பேருந்து நிலையத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். அவர்களுக்கு அங்குள்ள பொதுமக்கள் தங்களுடைய பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.