Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

ஓட ஓட விரட்டி கடித்த கதண்டுகள்…. காயமடைந்த 25 பேர்…. அச்சத்தில் பொதுமக்கள்…!!

கதண்டுகள் கடித்ததால் 25 பேர் காயமடைந்த சம்பவம் பொதுமக்களுடைய அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள அம்மன் குடி ஏழான்கட்டளை கிராமத்தில் இருக்கும் பனைமரத்தில் கதண்டுகள் கூடு கட்டியிருந்தது. நேற்று காலை கதண்டுகள் அவ்வழியாக சென்ற பொது மக்களை ஓட ஓட விரட்டி கடித்தது. இதே போல் ஏரகரம் கிராமத்தில் இருக்கும் பழமையான மரத்தில் கதண்டுகள் கூடு கட்டி இருந்தது.

அவ்வழியாக சென்ற பலரை கதண்டுகள் கடித்து காயப்படுத்தியது. இதனால் 16 ஆண்கள், 7 பெண்கள், 2 சிறுவர்கள் உள்பட 25 பேர் காயமடைந்தனர். அவர்கள் கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் பொதுமக்களிடையே மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |