Categories
சென்னை மாவட்ட செய்திகள்

ஓட ஓட விரட்டி கொன்ற நண்பர்….. மீனவர்களுக்கு நடந்த கொடூரம்…. சென்னையில் பெரும் பரபரப்பு…!!

வாலிபர் நண்பர்களை ஓட ஓட விரட்டி கொடூரமாக கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை மாவட்டத்திலுள்ள திருவான்மியூர் நடுக்குப்பம் வேம்புலி அம்மன் கோவில் தெருவில் வசித்த செல்வி என்பவர் கடந்த 16-ஆம் தேதி உயிரிழந்தார். இவரது 16வது நாள் காரிய நிகழ்ச்சிக்கு நெருங்கிய நண்பர்களான மீனவர்கள் பாபு, தினேஷ், அருண் ஆகிய மூன்று பேரும் கலந்து கொண்டனர். இவர்கள் 3 பேரும் குடிபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் உணவு பரிமாறும்போது அருணும், பாபுவும் ஒரு வரிசையிலும், தினேஷ் எதிர் வரிசையிலும் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தனர்.

அப்போது விளையாட்டாக அருண் செருப்பை எடுத்து வீசியுள்ளார். அந்த செருப்பில் இருந்த மண் தினேஷ் சாப்பாட்டில் விழுந்தது. இதனால் கோபமடைந்த தினேஷ் அருணை தகாத வார்த்தைகளால் திட்டி தாக்கியுள்ளார். இதனை தடுக்க வந்த பாபுவையும் தினேஷ் தாக்கியதாக கூறப்படுகிறது. இதனை அடுத்து இரவு 8 மணி அளவில் பாபுவும், அருணும் ஒன்று சேர்ந்து தினேஷை தாக்கியுள்ளனர். இதனால் கோபமடைந்த தினேஷ் மீன் வெட்டும் கத்தியால் பாபுவையும், அருணையும் ஓட ஓட விரட்டி சரமாரியாக குத்தி விட்டு அங்கிருந்து தப்பி சென்றார்.

இதனையடுத்து படுகாயமடைந்த 2 பேரையும் அருகில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களை பரிசோதித்துப் பார்த்த மருத்துவர்கள் இரண்டு பேரும் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தினேஷை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |