ஓணம் பண்டிகையை முன்னிட்டு சேலம் வழியாக கேரளாவுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக ரயில்வே கோட்ட அதிகாரிகள் கூறியுள்ளார்கள்.
ஓணம் பண்டிகை முன்னிட்டு சேலம் வழியாக கேரள மாநிலத்திற்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளது. அந்த வகையில் ஹைதராபாத்-திருவனந்தபுரம் சிறப்பு ரயில் ஹைதராபாத்தில் இருந்து நேற்று மாலை 6.15 மணிக்கு புறப்பட்டு சேலம் கோவை வழியாக இன்று திருவனந்தபுரம் செல்கின்றது. பின் திருவனந்தபுரத்திலிருந்து வருகின்ற 10-ம் தேதி இரவு 10 மணிக்கு புறப்பட்டு கோவை வழியாக 11ஆம் தேதி காலை 09.02 மணிக்கு சேலம் வருகின்றது.
பின் 12ம் தேதி அதிகாலை 3 மணிக்கு ஐதராபாத்-த்தில் புறப்படுகின்றது. மைசூர்-திருவனந்தபுரம் சிறப்பு ரயில் நாளை மதியம் 12:15 மணிக்கு மைசூர் ரயில் நிலையத்திலிருந்து புறப்பட்டு இரவு 07.25 மணிக்கு சேலம் வந்தடைந்து மதுரை, திருநெல்வேலி வழியாக 8-ம் தேதி திருவனந்தபுரம் செல்கின்றது. மறு மார்க்கமாக திருவனந்தபுரத்திலிருந்து வியாழக்கிழமை மதியம் 12.45 மணிக்கு புறப்பட்டு இரவு 1:35 மணிக்கு சேலம் வந்தடைகின்றது. 9-ம் தேதி மைசூரை சென்றடைகின்றது என சேலம் ரயில்வே கோட்ட அதிகாரிகள் கூறியுள்ளார்கள்.