Categories
தேசிய செய்திகள்

ஓணம் பண்டிகை….. தமிழகத்தில் 9 மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை….. வெளியான அறிவிப்பு…!!!!

தமிழகத்தில் மட்டும் மொத்தம் 9 மாவட்டங்களுக்கு ஓணம் பண்டிகைக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.

திருவோண பண்டிகை கேரள மக்களின் திருவிழா என்றாலும் கேரள எல்லையை ஒட்டியுள்ள தமிழக பகுதிகளிலும் இந்த விழா கொண்டாடப்படும். அந்த வகையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் ஓணம் பண்டிகை களைக்கட்டி வருகின்றது. இதற்காக குமரி மாவட்டத்திற்கு வருகிற 8-ம் தேதி உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது. அதேபோல் கோவை, நீலகிரி, திருப்பூர் சென்னை மாவட்டங்களுக்கும் எட்டாம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இங்கு மலையாளம் மொழி பேசும் மக்கள் அதிக அளவில் இருப்பதால் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு கூடுதலாக ஈரோடு , திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களுக்கும் ஓணம் பண்டிகைக்காக உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது. தமிழகத்தில் மட்டும் மொத்தம் 9 மாவட்டங்களுக்கு ஓணம் பண்டிகைக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |