Categories
தேசிய செய்திகள்

ஓணம் பண்டிகை: நகரங்களுக்கு சிறப்பு கட்டண ரயில்கள்…. தெற்கு ரயில்வே சூப்பர் அறிவிப்பு…..!!!!!

ஓணம் பண்டிகையை முன்னிட்டு தாம்பரம் – வேளாங்கண்ணி உள்ளிட்ட பல்வேறு நகரங்களுக்கு சிறப்பு கட்டண ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி  சென்னை தாம்பரத்தில் இருந்து செப்டம்பர் 7 ஆம் தேதி இரவு 10.30 மணிக்கு புறப்படும் சிறப்பு கட்டண ரயில், மறுநாள் அதிகாலை 5.45 மணிக்கு வேளாங்கண்ணி சென்றடையும். பின்னர் வேளாங்கண்ணியில் இருந்து செப்டம்பர்  8 ஆம் தேதி இரவு 11 மணிக்கு புறப்படும் சிறப்பு கட்டண ரயில் அடுத்த மூன்றாவது நாளில் காலை 10 மணிக்கு மகாராஷ்டிரா மாநிலம் பன்வெல் சென்றடையும்.

அதனைப்போலவே கோவா மாநிலம் வாஸ்கோடகாமாவில் இருந்து வரும் 27ம் தேதி காலை 9 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில்  மறுநாள் பகல் 12.25 மணிக்கு வேளாங்கண்ணி செல்லும்.அங்கிருந்து  வரும் 28ம் தேதி இரவு 11.45 மணிக்கு புறப்படும் இந்த ரயில் அடுத்த 3வது நாளில் அதிகாலை 4 மணிக்கு வாஸ்கோடகாமா செல்லும். பின்னர் வாஸ்கோடகாமாவில் இருந்து செப்டம்பர்  2ம் தேதி மதியம் 2.30 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் மறுநாள் இரவு 7.10 மணிக்கு வேளாங்கண்ணி செல்லும். சிறப்பு ரயில்களுக்கான டிக்கெட் முன்பதிவு தொடங்கியுள்ளது என தெரிவித்துள்ளது.

Categories

Tech |