கேரளாவில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு பள்ளி கல்லூரிகளுக்கு செப்டம்பர் இரண்டாம் தேதி முதல் 11ம் தேதி வரை விடுமுறை அளிக்கப்படுவதாக மாநில அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பாக அரசு வெளியிட்டுள்ள செய்தியில்,கேரளாவில் வெகு விமர்சையாக கொண்டாடப்படும் ஓனம் பண்டிகையை முன்னிட்டு அனைத்து பள்ளி கல்லூரிகளுக்கும் அடுத்த மாதம் இரண்டாம் தேதி முதல் 11ஆம் தேதி வரை விடுமுறை வழங்கப்படுகிறது.
ஓணம் பண்டிகையை முன்னிட்டு நடைபெறும் தேர்வுகள் முன்னதாகவே நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி தேர்வுகள் வருகின்ற 24-ஆம் தேதி முதல் தொடங்குகிறது. முன்னதாக கனமழை காரணமாக விடுமுறை அறிவிக்கப்பட்ட நாட்களை ஈடு செய்யும் விதமாக இன்று பள்ளி கல்லூரிகள் இயங்கும் என அரசு தெரிவித்துள்ளது.