கேரள அரசின் லாட்டரி இயக்குனரகம் சார்பில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு முதல் பரிசு 25 கோடி ரூபாய் காண பம்பர் லாட்டரி டிக்கெட் விற்பனை நடைபெற்றுள்ளது. ஒரு டிக்கெட்டின் விலை 500 ரூபாய் ஆகும். 10 சீரியல்களில் மொத்தம் 67.50 லட்சம் டிக்கெடுகள் அச்சடிக்கப்பட்டிருக்கிறது 90 ஆயிரம் டிக்கெட்டுகள் தவிர அனைத்து டிக்கெட்டுகளும் விற்பனையாகியுள்ளது. இதன் மூலமாக கேரள லாட்டரி துறைக்கு 330 கோடி ரூபாய் வருமானம் கிடைத்துள்ளது. இந்த சூழலில் ஓனம் பம்பர் லாட்டரி குலுக்கல் நேற்று திருவனந்தபுரத்தில் நடைபெற்றுள்ளது. நிதி மந்திரி பாலகோபால் குழுக்களை தொடங்கி வைத்துள்ளார். இதில் முதல் பரிசு 25 கோடி டிஜே 750605 என்ற எண்ணுக்கு கிடைத்திருக்கிறது.
அந்த லாட்டரி சீட்டை திருவனந்தபுரம் ஸ்ரீவராகம் எனும் இடத்தைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் அனுப் என்பவர் வாங்கியுள்ளார். இந்த முதல் பரிசு 25 கோடி கிடைத்தது பற்றி அவர் பேசிய போது பம்பர் பரிசு 25 கோடி எனக்கு கிடைத்ததை நம்ப முடியவில்லை மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. ஆட்டோ ஓட்டி தொழில் செய்து வந்த எனக்கு தொழிலில் போதிய வருமானம் இல்லாத காரணத்தால் மலேசியாவில் வேலை பார்க்க சென்றிருந்தேன். இனிமேல் அதற்காக அவசியம் இல்லை என அவர் தெரிவித்துள்ளார். அனுப்க்கு மரியா என்னும் மனைவியும் ஒரு மகனும் இருக்கின்றனர். இரண்டாவது பரிசாக 5 கோடியும், மூன்றாவது பரிசாக 10 பேருக்கு தலா ஒரு கோடி வீதம் வழங்கப்படுகின்றது. அனுப் பம்பர் லாட்டரி டிக்கெட்டை முன்தினம் இரவு 7 மணிக்கு வாங்க கடைக்கு சென்று உள்ளார். அப்போது அவரிடம் 500 ரூபாய் இல்லை. மேலும் பணம் குறைவாக இருந்ததனால் வீட்டிற்கு வந்து சேமித்து வைத்திருந்த உண்டியலை உடைத்து அதிலிருந்து பணத்தை எடுத்துச் சென்று லாட்டரி சீட்டை வாங்கி இருக்கிறார். அந்த லாட்டரி சீட்டுக்கு தான் தற்போது 25 கோடி பணம் கிடைத்திருக்கிறது. இந்த நிலையில் அவருக்கு வருமான வரி ஏஜென்ட் கமிஷன் போக 15 .75 கோடி ரூபாய் கிடைக்கும் என லாட்டரி உயர் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.