ஓணம் பண்டிகையான நேற்று ஒரே ஒரு வீடியோவை தான் தமிழ் ரசிகர்கள் இணையத்தில் அதிகம் பகிர்ந்தார்கள்.
கேரளா மக்களின் முக்கிய பண்டிகையாக ஓணம் பண்டிகை கருதப்படுகின்றது. இந்நிலையில் நேற்று ஓணம் பண்டிகையை கேரளா மக்கள் கொண்டாடினார்கள். அவர்களுக்கு இணையத்தில் பலரும் வாழ்த்து தெரிவித்தார்கள். இந்த நிலையில் ஜிமிக்கி கம்மல் பாடலுக்கு ஷெரில் ஆடிய வீடியோவை தமிழ் சினிமா ரசிகர்கள் பலரும் அதிக அளவில் பகிர்ந்தார்கள்.
கேரள மாநிலத்தில் உள்ள கொச்சியில் இருக்கும் இந்தியன் ஸ்கூல் ஆப் காமர்ஸில் பணிபுரியும் ஆசிரியை ஷெரில் தனது சக ஊழியர்களுடன் சேர்ந்து ஜிமிக்கி கம்மல் பாடலுக்கு நடனம் ஆடினார். அந்த வீடியோவானது வெளியாகி மிகவும் வைரலானது. இது மூலம் அவருக்கு அதிக ரசிகர்கள் கிடைத்தார்கள். இந்த நிலையில் ஓணம் பண்டிகை என்பதால் ஷெரிலின் வீடியோவை பகிர்ந்து இந்த பாடலையும் டீச்சரையும் மறக்க முடியாது என இணையதள வாசிகள் கூறினார்கள்.
Time Travel To 2017 #Onam2022 #Jailer pic.twitter.com/Z4aPFVncTL
— ρяαвα ¢нαρℓιи (@Chaplin_Here) September 8, 2022