Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

ஓனர் மும்பையில இருக்காருன்னு இப்படி செஞ்சிருக்காங்க…. வசமாக சிக்கிய வாலிபர்…. காவல்துறையினர் அதிரடி நடவடிக்கை….!!

நெல்லையில் வீட்டினுடைய கதவை உடைத்து திருட முயன்ற வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

திருநெல்வேலி மாவட்டம் பொன்னாகுடியில் முத்துராஜ் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் இவர் அதே பகுதியில் இருக்கும் மும்பையைச் சேர்ந்தவருடைய வீட்டை பராமரித்து வருகிறார். இந்நிலையில் சம்பவத்தன்று மர்ம நபர்கள் முத்துராஜ் பராமரித்து வரும் வீட்டினுடைய பூட்டை உடைத்து வீட்டினுள் இருக்கும் பொருட்களை கொள்ளையடிக்க முயற்சி செய்துள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த முத்துராஜ் முன்னீர் பள்ளத்திலிருக்கும் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அப்புகாரை ஏற்ற காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அவ்விசாரணையில் அதே பகுதியை சேர்ந்த முருகன் என்ற வாலிபரை கைது செய்துள்ளனர்.

Categories

Tech |