Categories
தேசிய செய்திகள்

ஒன்று சேர்ந்த எதிர்க்கட்சிகள்… “செப்.20 முதல் 30ஆம் தேதி வரை நாடு தழுவிய போராட்டம்”… ஆலோசனை கூட்டத்தில் முடிவு..!!

பாஜகவின் மக்கள் விரோத போக்கை கண்டித்து செப்.20 முதல் 30ஆம் தேதி வரை நாடு தழுவிய போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது..

காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி எதிர்கட்சி தலைவர்களுடன் காணொளி வாயிலாக ஆலோசனை மேற்கொண்டார்.. இந்த ஆலோசனை கூட்டத்தில் தமிழக முதல்வர் ஸ்டாலின், மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, சிபிஐ தேசிய செயலர் டி ராஜா, சிபிஎம் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் உள்ளிட்ட 18 எதிர்க்கட்சி தலைவர்கள் பங்கேற்றனர்.. ஊ.பியில் ஊரகப் பகுதியில் இருந்ததால் அகிலேஷ் யாதவ் கூட்டத்தில் பங்கேற்கவில்லை.

இந்த ஆலோசனையின் போது முதல் கட்டமாக உரையாற்றிய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, 2024 மக்களவை  தேர்தலுக்கான திட்டமிடலை இப்போதே தொடங்க வேண்டும். 2024 ஆம் ஆண்டு மக்களவை தேர்தல் வரை எதிர்கட்சிகள் ஒற்றுமையுடன், ஒரே சிந்தனையுடன் தொடர வேண்டும். 2024 மக்களவை தேர்தலே நமது இலக்கு..

மழைக் கால கூட்டத்தொடர் நிறைவடைந்துள்ளது. மழைக்கால கூட்டத்தொடரை போன்று எதிர்கால நாடாளுமன்ற கூட்டத் தொடரிலும் அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். “நமக்குள் பல்வேறு கருத்துகள் இருந்தாலும் நம் தேச நலனுக்காக, தேசத்தின் தேவைக்காக ஒன்றாக ஒரே குறிக்கோளுடன் இணைந்து செயல்பட வேண்டும்” என்று தெரிவித்தார்.

இதனை தொடர்ந்து, இந்த கூட்டத்தில்  பாஜகவின் மக்கள் விரோத போக்கை கண்டித்து செப்.20 முதல் 30ஆம் தேதி வரை நாடு தழுவிய போராட்டம் நடைபெறுவதாக  முடிவு செய்யப்பட்டுள்ளது. 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும், பெட்ரோல் டீசல் சமையல் சிலிண்டர் சமையல் எண்ணெய் விலையை குறைக்க வேண்டும், உள்ளிட்ட  11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடைபெற உள்ளதாக எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளது..

Categories

Tech |