இளவரசர் சார்லஸ் மீதும் வில்லியம் மற்றும் கேட் மீதுதான் ஹரி மற்றும் மேகனிற்கு கோபம் இருப்பதாக தெரியப்படுகிறது.
இளவரசர் ஹரி-மேகன் தம்பதியினர் ஓப்ராவுடனான பேட்டியில் தங்களுக்கு அரச குடும்பத்தில் ஏற்பட்ட சோகங்களை பற்றி கூறினார்கள். ஆனால் அதில் அவர்கள் தப்பி தவறி கூட மகாராணியாரையோ, தாத்தாவான இளவரசர் பிலிப்பையோ அவர்கள் தவறாக கூறவில்லை. அவர்கள் தங்கள் குழந்தையின் நிறத்தை பற்றி குடும்பத்திலிருந்த ஒருவர் விமர்சித்ததாக கூறினார்கள். இனவெறி குற்றச்சாட்டை அவர்கள் முன்வைக்கும் போது மகாராணியாரோ அல்லது இளவரசர் பிலிப்போ அவ்வாறு கூறவில்லை என்பதை பேட்டியில் தெளிவாக கூறினார்கள்.
மேலும் அந்த பேட்டியில் மேகன் ஒரு விஷயத்தை கூறினார். அது என்னவென்றால் ஒரு முறை பொது நிகழ்ச்சி ஒன்றிற்கு மகாராணியாருடன் மேகன் சேஸிர் என்ற இடத்திற்கு சென்றுள்ளார்.அந்த நிகழ்ச்சி முடிந்து காரில் ஏறும்போது கார் கூலாக இருந்ததால் மகாராணி ஒரு போர்வையை மூடி கொள்வதற்காக எடுக்கும் போது தனக்கும் சேர்த்து முடியதாக மேகன் குறிப்பிட்டார். மகாராணியார், மேகன் கால்களை போர்வையால் மூடி விடும் அந்த வீடியோ காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது. எனவே ஹரிக்கும் ,மேகனுக்கும் பிரச்சனை தாத்தா, பாட்டியுடன் இல்லை என்பது தெளிவாக தெரிகிறது.