அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர் செல்வத்தின் தம்பி மகனின் கார் மற்றும் அதிலிருந்து வேட்டி சேலைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. ஓபிஎஸின் தம்பி சண்முகசுந்தரம் பெரியகுளம் நகராட்சி கவுன்சிலர் பதவிக்குப் போட்டி இடுகிறார். இந்நிலையில் தென்கரை பகுதியில் சென்று கொண்டிருந்த ஓ.பி ராஜாவின் மகன் முத்து குகனின் காரை மடக்கி பிடித்த திமுகவினர் அதில் வேஷ்டி சேலை இருப்பதாக குற்றம்சாட்டினர்.
அதிமுகவினரும் அங்கு திரண்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து அவருடைய கார் போலீஸ் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டு காரில் இருந்த வேட்டி சேலை பறிமுதல் செய்யப்பட்டது. இதனையடுத்து கார் விடுவிக்கப்பட்டது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.