அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி டெல்லி புறப்பட்டார். அவருடன் முன்னாள் அமைச்சர் வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்டோர் சென்றனர். அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை அங்கீகரிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திடம் மனு அளிக்கவே இபிஎஸ் டெல்லி சென்றுள்ளதாக கூறப்படுகிறது. அதிமுக பொதுக்குழுவே செல்லாது என ஓபிஎஸ் கூறி வருகிறார். ஒருவேளை இபிஎஸ்சின் இந்த கோரிக்கையை தேர்தல் ஆணையம் ஏற்றால், ஒபிஎஸ்சுக்கு மேலும் பின்னடைவுதான்.
Categories