அதிமுக பொதுக்குழு வழக்கின் தீர்ப்பை நேற்று சென்னை உயர்நீதிமன்றம் வழங்கியது. அதில் இடைக்கால பொதுச் செயலாளராக இபிஎஸ் தேர்வு செய்யப்பட்டது செல்லாது என்று அறிவித்தது. மேலும் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் இணைந்து தான் பொதுக்குழுவை கூட்ட வேண்டும் என்றும் தெரிவித்தது. இதனால் ஓபிஎஸ் தரப்பு மிகவும் மகிழ்ச்சி அடைந்த நிலையில் இபிஎஸ்க்கு இந்த தீர்ப்பு பெரும் பின்னடையவே ஏற்படுத்தியது.
பொதுக்குழு உறுப்பினர்களில் 5இல் ஒரு பகுதியினர் முறையாகக் கடிதம் கொடுத்து பொதுக்குழுவை கூட்டக் கோரினால், ஒருங்கிணைப்பாளரோ, இணை ஒருங்கிணைப்பாளரோ அதை மறுக்கக் கூடாது என்று நீதிமன்றம் கூறியுள்ளது. இதில் இருவரும் முரண்பட்டால் பொதுக்குழுவைக் கூட்ட ஆணையரை நியமிக்க நீதிமன்றத்தை நாடலாம். 90% பொதுக்குழு உறுப்பினர்களைக் கையில் வைத்திருக்கும் ஈபிஎஸ், இதை பயன்படுத்தி ஓபிஎஸ்க்கு நெருக்கடி கொடுக்க முடியும்.