அதிமுக பொதுக்குழு வழக்கு விசாரணைக்குப்பின், இபிஎஸ்சுக்கு சாதகமாகவே அனைத்தும் சென்று கொண்டிருக்கின்றன. இதை, பயன்படுத்தி, இன்னும் எத்தனை நாளைக்கு தான் ஓபிஎஸ்-ஐ நம்பிக்கொண்டிருப்பீர்கள். அம்மா வளர்த்த கட்சியை வலுப்படுத்த அனைவரும் வாருங்கள். என்ற அழைப்போடு ஓபிஎஸ் தரப்பில் உள்ள முக்கிய நிர்வாகிகளை இழுப்பதற்கான வியூகம் அமைத்துள்ளதாக கூறப்படுகிறது.
அதன்படி ஓபிஎஸ் பக்கம் உள்ள வைத்திலிங்கம், தர்மன் எம்பி, மனோஜ் பாண்டியன், ஜே.சி.டி. பிரபாகர் ஆகியோரை தன் பக்கம் இழுக்க இபிஎஸ் முயற்சித்து வருகிறாராம். அவர்கள் வந்துவிட்டால், ஓபிஎஸ்சுக்கு வேறு வழியில்லை தனி மரம் ஆகிவிடுவார். சசிகலா பக்கம் சென்றாலும், அந்தளவிற்கு ஆதரவு இருக்காது. கடைசியில் நம்மிடம்தான் வருவார் என்பது இபிஎஸ் கணக்கு.