நேற்று பழனியில் பொதுக்குழு கூட்டத்தில் கலந்து கொண்ட எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி பல விஷயங்களை தெரிவித்து இருந்தார். அதாவது முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி விரைவில் கலைக்கப்படும். 60 அமாவாசைகளில் 14 அமாவாசைகள் சென்றுவிட்டது. மீதமுள்ள 46 அமாவாசைகள் முடியும் முன்பே வரும் 2024 நாடாளுமன்ற தேர்தலுடன் சட்டமன்ற தேர்தலும் வரும் என்று கூறியிருந்தார் .
இதைத் தொடர்ந்து இன்று காலை முதல் பழனியில் உள்ள முருகப்பெருமான் கோவிலில் தரிசனம் செய்தார். பழனி முருகன் கோயிலில் நடந்த காலசாந்தி, சிறுகாலசாந்தி பூஜையில் அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் இபிஎஸ் பங்கேற்றார். இதன்பின், வேடன் அலங்காரத்தில் இருந்த முருகனை வழிபட்ட அவர், போகர் சித்தர் பீடத்தில் திடீரென்று அமர்ந்து தியானத்தில் ஈடுபட்டார். தியானத்திற்கு பெயர்பெற்ற ஓபிஎஸ்சை மிஞ்சும் அளவிற்கு இபிஎஸ் உச்சநிலையில் தியானம் செய்த வீடியோ வைரலாகி வருகிறது.