செய்தியாளர்களிடம் பேசிய அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட புகழேந்தி, சசிகலா பொதுக்குழு கூட்டணுமா, அவங்க போது செயலாளரா இல்ல, இவங்க போட்ட ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் இவங்க போட்டதெல்லாம் கரெக்டா என்று பார்க்க வேண்டியது நீதிமன்றம். நீதிமன்றத்தில் வழக்கு நடந்து கொண்டிருக்கிறது, இவர்கள் எப்படி நடத்த முடியும். தேர்தல் ஆணையம் கேட்கிறது என்பதற்காக நான் நடத்துகிறேன் என்று சொன்னால், தேர்தல் ஆணையத்தைவிட பெரியது நீதிமன்றம் பெருசு,
தேர்தல் ஆணையத்தின் உத்தரவை நீதிமன்றம் சரி பண்ணலாம், நீதிமன்றத்தின் உத்தரவை தேர்தல் ஆணையத்தால் எதுவும் பண்ண முடியாது. அந்த 7000/ 2017 வழக்கில் நானும் இன்டர்வினர். அப்ப என்ன சொல்லி இருக்கு… கட்சி நடத்திகோங்க என்று சொல்லி இருக்கு, நீங்க கார்டு அடித்து தேர்தலை நடத்த சொல்லல. ஆகவே அடிப்படையிலே ஒரு தப்பு செய்கிறார்கள்.
ஓபிஎஸ் அவர்கள் ரொம்ப சாமர்த்தியமாக எதிர்க் கட்சியை எதிர்த்து கேள்வி கேட்கிறாராம், பெட்ரோல் டீசல் விலை ஜாஸ்தி ஆகிஉள்ளது என, யாரு பெட்ரோல் டீசல் விலை உயருவதற்கு காரணம், பாரத பிரதமர் இந்த நாட்டினுடைய பிரதமர் ஆகும் பொழுது 49 ரூபாய் 50 ரூபாய், இன்றைக்கு 100 ரூபா வேண்டாம்.. விடுங்க பெட்ரோல், டீசல் விலையை…. 1000 ரூபாய் சிலிண்டர், ஏழை தாய்மார்கள் கண்களில் நீர் வடித்து அதை வாங்க முடியாமல் தவிக்கிறார்களே அதை பேசுங்கள் ஓபிஎஸ் அண்ணே… ஆயிரம் ரூபாய் சிலிண்டர் விக்குது கம்மி பண்ண சொல்லுங்க மோடியை என தெரிவித்தார்.