அதிமுகவின் ஒற்றை தலைமை விவகாரம் கடந்த சில நாட்களாக நீடித்து வரும் நிலையில் அதிமுகவை கைப்பற்றும் போரில் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் பன்னீர்செல்வம் ஈடுபட்டுள்ள நிலையில் மாறி மாறி வழங்கப்படும் தீர்ப்புகளால் அந்த கட்சியின் தொண்டர்கள் யார் பக்கம் நிற்பது என தெரியாமல் திணறி வருகிறார்கள்.
இந்நிலையில் அதிமுக அலுவலக சாவியை இபிஎஸ் வசம் ஒப்படைக்க அண்மையில் நீதிமன்ற உத்தரவிட்டது.இதற்கு எதிராக ஓபிஎஸ் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளார்.இந்நிலையில் இந்த வழக்கில் இபிஎஸ் தரப்பு பதில் மனு தாக்கல் செய்துள்ளது. அந்த மனுவில், ஓபிஎஸ் கட்சியின் அடிப்படை உறுப்பினராக இல்லாத போது அதிமுக அலுவலகத்திற்கு உரிமை கூற முடியாது.
பண விவகாரங்களில் ஓபிஎஸ் கையாடல் செய்துள்ளதால் அலுவலக சாவியை அவரிடம் ஒப்படைக்க கூடாது. அதிமுக அலுவலகத்தில் ஓபிஎஸ் தனது ஆதரவாளர்களுடன் வன்முறையில் ஈடுபட்டு பொருட்களை சேதப்படுத்தி உள்ளார் என்று குறிப்பிட்டுள்ளது.நாளை இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும் நிலையில் இபிஎஸ் தரப்பின் இந்த மனு அரசியலில் புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது m