சென்னை அருகே வானகரத்தின் நடைபெற்ற அதிமுக பொதுக்குழு செயற்குழு கூட்டத்தில் அக்கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தேர்ந்தெடுக்கப்பட்டார். இதற்கான தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது. அது மட்டுமின்றி கட்சி விதிகளிலும் பல்வேறு திருத்தங்கள் செய்து தீர்மானங்கள் கொண்டுவரப்பட்டது. அதிமுகவில் புதிதாக துணை பொதுச் செயலாளர் பதவி உருவாக்கப்பட்டது. ஓபிஎஸ் உட்பட அவரது ஆதரவாளர்கள் அனைவரும் அடிப்படை உறுப்பினர்கள் பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.
கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு அதிமுகவில் இருந்து ஓபிஎஸ் மகன்களான ரவீந்திரநாத் மற்றும் ஜெயப்ரதீப் ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர். அதிமுகவின் கொள்கை மற்றும் கோட்பாடுகளுக்கு முரணாக செயல்பட்டதாக கூறி ரவீந்திரநாத், ஜெயப்ரதீப் உள்ளிட்ட ஓபிஎஸ் ஆதரவாளர்கள் 18 பேரை, அக்கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அதிரடியாக நீக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், இன்று ஓபிஎஸ் ஆதரவாளர்கள் மேலும் 21 பேரை அதிமுகவில் இருந்து நீக்குவதாக இபிஎஸ் அறிவித்துள்ளார். இதில் முன்னாள் MLA சுப்புரத்தினம், வெல்லமண்டி நடராஜன் மகள் ஜவகர், நாஞ்சில் கோலப்பன் உள்ளிட்ட 21 பேர் நீக்கப்பட்டுள்ளனர். இடைக்கால பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்ட பின்பு, ஓபிஎஸ் உள்ளிட்ட அவரது ஆதரவாளர்களை இபிஎஸ் நீக்கினார். இதைத் தொடர்ந்து இபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் ஓபிஎஸ் நீக்கிய நிலையில், தற்போது மீண்டும் ஓபிஎஸ் ஆதரவாளர்களை இபிஎஸ் நீக்கியுள்ளார்.