Categories
அரசியல் மாநில செய்திகள்

ஓபிஎஸ், இபிஎஸ்சுக்கு ஒண்ணுமே தெரில…! பரிதாப நிலையில் அதிமுக… பரபரப்பை கிளப்பும் புகழேந்தி …!!

செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக முன்னாள் நிர்வாகி புகழேந்தி, முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் திரு ஓபிஎஸ் அவர்கள் மீது தொடர்ந்து மானநஷ்ட அவதூறு வழக்கு வருகின்ற 15 டிசம்பருக்கு மாண்புமிகு நீதிபதி அவர்கள் ஒத்தி வைத்து இருக்கிறார்கள். இன்னும் ஆவலோடு உயர் நீதிமன்றத்தின்னுடைய அந்த ஆணைக்காக காத்திருக்கின்றோம், ஒரு சரித்திரம் வாய்ந்த தீர்ப்பாக அமையும் என்று நான் எதிர்பார்க்கிறேன். இது கோர்ட் நடவடிக்கை… இப்ப முக்கியமான விஷயம் என்னவென்று கேட்டீர்கள்  மாவட்ட செயலாளர்கள் கூட்டம் அனைத்திந்திய அண்ணா திமுக அலுவலகத்தில் நடைபெற்றது.

அதில் இன்னொரு வரியும் சேர்ந்து வருகிறது…  என்னவென்றால், பொதுக்குழு கூட்டுவது சம்பந்தமாக பேசப்படும் என்று சொல்லி. எனக்கு ஏதும் தெரியவில்லை நீதிமன்றத்திற்கு மரியாதையை கொடுக்கிறார்களா ?  இல்லையா ஒன்னும் புரியல. உயர்நீதிமன்றத்தால் உத்தரவிடப்பட்ட அந்த சிவில் கோர்ட்ல கேஸ் பெண்டிங் இருக்கு. அந்த கோர்டினுடைய முடிவு வந்தால் தான் இவர்கள் ஒரு ஒருங்கிணைப்பாளரா, இணை ஒருங்கிணைப்பாளரா என்பது நிர்ணயம் செய்யப்படும். திருமதி வி.கே.சசிகலா என்கின்ற சின்னமா பொதுசெயலளாராக தொடர்வதற்கும் அந்த தீர்ப்பு தான் அமையும். ஆகவே அதே முடியல.

ரொம்ப நாளாக பொதுக்குழுவை கூட்டவில்லையே என்று சொல்லி கடிதம் போட்ருக்கு தேர்தல் ஆணையத்துக்கு தெரியும். ஆனால் தேர்தல் ஆணையம் எந்த முடிவும் நீதிமன்றம் சொன்னதை தான் செய்யுமே தவிர, தேர்தல் ஆணையத்தால் நீதிமன்றத்தை மீறி எதுவும் செய்ய முடியாது. அப்போ நீதிமன்றம் என்ன சொல்லியிருக்கு…  நீங்க பொதுக்குழு கூட்டிக்கலாம், ஆனால் அந்த பொதுக்குழுவில் எடுக்கின்ற முடிவுகள், தீர்மானங்கள் எல்லாமே வருகிற தீர்ப்பை பொறுத்து தான் அமையும் என்று சொல்லியிருக்கு.

அப்போ எந்த அடிப்படையில புதுசா கார்டு அடித்து இ.பி.எஸ், ஓ.பி.எஸ் படத்தை போட்டு அந்த கார்டை வைத்து பொதுக்குழு நடத்துவீர்கள், அப்படி பொதுக்குழு நடத்தினால், சட்டத்தை மீறினால் ஒன்று கோர்ட்டுக்கு போகவேண்டியது வரும், இல்லையென்றால் திருமதி வி.கே.சசிகலா என்கின்ற சின்னம்மா அவர்கள் ஒரு பொதுக்குழுவை கூட்டுவார்கள், இரண்டு பொதுக்குழுவாக நடப்பதற்கும் அங்கே வாய்ப்பு இருக்கின்றது. எல்லாமே ஒரு ஐடியா இல்லாம எதுவுமே தெரியாம, இப்படி ஒரு பொதுக்குழுவை கூட்டுவேன் என்று சொல்வது, ஆலோசிப்பது என இப்போ அ.இ.அ.தி.மு.கவின் பரிதாப நிலையை நான்  பார்க்கிறேன் என தெரிவித்தார்.

Categories

Tech |