தமிழகத்தில் எதிர்க்கட்சித் துணைத் தலைவர் தொடர்பாக சபாநாயகரிடம் ஓ பன்னீர்செல்வம் எடப்பாடி பழனிசாமி போன்றோர் தனித்தனியே கடிதம் அனுப்பியுள்ளனர். இது தொடர்பாக இன்று செய்தியாளர்களை சந்தித்த சபாநாயகர் அப்பாவும் இந்த விவகாரம் தொடர்பாக டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்து எதிர்க்கட்சி தலைவர் விஷயம் நீதிமன்றத்தில் இருப்பதால் தான் எந்த ஒரு பதிலும் கூற முடியாது என தெரிவித்துள்ளார். மேலும் அவரே சொல்லாத போது நான் மட்டும் என்ன சொல்ல முடியும். அதே நேரம் பழைய நடைமுறை தொடரும் என ஒருபோதும் கூறியது இல்லை.
புதிதாக உருவாக்க போகிறோம் எனவும் கூறவில்லை என்றால் ஓபிஎஸ் இபிஎஸ் எழுதியிருக்கின்ற கடிதம் என்பது அவர்களின் கட்சி சார்ந்த பிரச்சனையாகும். யார் மீதும் விருப்பு வெறுப்பு இல்லாமல் உரிய நேரத்தில் முடிவு எடுக்கப்படும் என கூறியுள்ளார். மேலும் தொடர்ந்து பேசும்போது சட்டமன்ற வேறு நீதிமன்றம் வேறு சட்டத்திற்கு என்ன அதிகாரங்கள் இருக்கின்றதோ அதனை பயன்படுத்தி என்ன நடவடிக்கை எடுக்க முடியுமோ அதை ஜனநாயக முறைப்படி நியாயமாக எடுப்போம். இந்த விஷயத்தில் யாருக்காகவும் காத்திருக்க மாட்டோம் சட்டமன்றத்திற்கு என தனி அதிகாரங்கள் உள்ளது. அதன்படி நடந்து கொள்வோம் வெளிப்படை தன்மையுடனும் தான் இருக்கிறோம் என தெரிவித்துள்ளார்.
மேலும் சட்டமன்ற கூட்டத்தொடரை எப்படி அனைத்து தரப்பினும் பாராட்டு விதமாக நடத்தினோமோ அதே போல் இந்த விஷயத்திலும் செயல்படுவோம் என கூறியுள்ளார். முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேசியது பற்றி கேட்டதற்கு அவரும் இந்த இருக்கையில் தான் அமர்ந்தவர் அதனால் மனசாட்சிப்படி பேச வேண்டும் அவரது பேச்சை நான் குற்றமாக எடுத்துக் கொள்ளவில்லை என தெரிவித்து நிறைவு செய்துள்ளார். இந்த நிலையில் சென்னையில் நேற்று பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அண்ணா தொழிற்சங்கம் சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றுள்ளது.
இதில் கலந்துகொண்டு பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சபாநாயகர் அப்பாவு தன் பணியை மட்டும் பார்க்க வேண்டும் கட்டப்பஞ்சாயத்து ராஜாவாக செயல்படக் கூடாது. மேலும் அதிமுகவினர் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என சபாநாயகர் கூறுவது தேவையற்றதாகும். ஓபிஎஸ்ஐ துணை எதிர்க்கட்சித் தலைவர் என்ற பதவியில் இருந்து நீக்க வேண்டும் என கொடுத்த மனுவை சபாநாயகர் சட்டப்படி ஏற்றுக்கொள்ள வேண்டும். அப்போதுதான் மாண்புமிகு சபாநாயகர் இல்லை என்றால் மான்பில்லா சபாநாயகர் என அழைக்கப்படுவார் என குறிப்பிட்டு இருந்தது குறிப்பிடத்தக்கதாகும்.