Categories
அரசியல் மாநில செய்திகள்

“ஓபிஎஸ் ஈபிஎஸ் பதவிக்கு காத்திருக்கும் வேட்டு!”…. சென்னை ஹைகோர்ட் அதிரடி விசாரணை….!!!!

கடந்த 2019-ஆம் ஆண்டு அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா மறைந்த பிறகு பொதுச்செயலாளர் பதவி நீக்கப்பட்டு இணை ஒருங்கிணைப்பாளர், ஒருங்கிணைப்பாளர் பதவிகள் உருவாக்கப்பட்டது. மேலும் இனி கட்சியின் அடிப்படை உறுப்பினர்கள் வாக்களித்து இணை ஒருங்கிணைப்பாளர் மற்றும் ஒருங்கிணைப்பாளரை தேர்வு செய்வார்கள் என்ற சட்ட விதிகள் கொண்டுவரப்பட்டது.

பின்னர் கடந்த டிசம்பர் 6-ஆம் தேதி நடந்த அதிமுக தேர்தலில் இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிச்சாமியும், ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வமும் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டனர். இதற்கிடையே அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.சி.பழனிசாமி அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தேர்தலை ரத்து செய்யக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

ஆனால் நீதிமன்றம் தேர்தலில் தலையிட மறுப்பு தெரிவித்துவிட்டது. இதையடுத்து நேற்று மீண்டும் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது நீதிபதி அப்துல் குத்தூஸ், தேர்தல் முடிந்து விட்ட நிலையில் வழக்கை தொடர்ந்து நடத்த விரும்புகிறீர்களா ? என்று கேள்வி எழுப்பியுள்ளார். அதற்கு மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் தியாகேஸ்வரன் வழக்கை தொடர்ந்து நடத்த இருப்பதாக தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே அதிமுக தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர்கள் அரவிந்த் பாண்டியன், விஜய் நாராயணன் ஆகிய இருவரும் கே.சி.பழனிச்சாமி தேர்தலை எதிர்த்து தொடர்ந்த வழக்கை ரத்து செய்யக்கோரி மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக கூறியுள்ளனர். பின்னர் நீதிபதி இந்த வழக்கை வருகின்ற பிப்ரவரி மாதம் 8-ஆம் தேதிக்கு ஒத்தி வைப்பதாக கூறினார்.

Categories

Tech |