Categories
அரசியல் மாநில செய்திகள்

ஓபிஎஸ், ஈபிஎஸ் மோதலில் இணையும் சசிகலா….! அதிமுக அலுவலகத்திற்கு செல்லபோவதாக அறிவிப்பு….!!!

அதிமுகவில் ஒற்றை தலைமை பிரச்சினை பூதாகரமாக வெடித்துள்ளது. ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் ஆதரவாளர்கள் தொடர்ந்து கருத்து யுத்தம் நடத்தி வருகின்றனர். தமிழகம் முழுவதும் இந்த பிரச்சனையே தற்போது பெரும்பாலும் பேசப்பட்டு வருகின்றது. அதிமுகவில் ஒற்றை தலைமைக்காக இபிஎஸ், ஓபிஎஸ் இடையே பிரச்சனை முடிவுக்கு வராத நிலையில் நான் தான் பொதுச்செயலாளர் என்று கூறி நீதிமன்றத்தில் சசிகலா அவர்கள் வழக்கு தொடங்கியுள்ளதால் இந்த பிரச்சனையில் தற்போது சசிகலாவும் இணைந்துள்ளார்.

திருவள்ளுவர் மாவட்டம் தாமரைப்பாக்கத்தில் பேசிய அவர் அதிமுக தலைமை அலுவலகத்திற்கு உரிய நேரத்தில் தொண்டர்களுடன் செல்ல இருப்பதாகவும், அதிமுகவிலிருந்து யார் யாரையும் நீக்க முடியாது என்று குறிப்பிட்டார். பூந்தமல்லியில் பேசிய சசிகலா அதிமுகவிற்கு ஒற்றை தலைமை கட்டாயம் வேண்டும். அதே சமயத்தில் தொண்டர்கள் அனைவரையும் அரவணைத்து செல்கின்ற தலைமையாக தொண்டர்களால் தேர்ந்தெடுக்கப்படுகின்ற தலைமையாக இருக்க வேண்டும்.

தனக்காக ஆதரவாளர்கள் சிலரை பேச வைத்து விட்டு, நான் தான் தலைமை என்று தன்னைத்தானே ஏமாற்றிக் கொண்டு, அதிமுக தலைமை நாற்காலியை வலுக்கட்டாயமாக பிடித்துக் கொண்டு இருந்தால் தலைவராகி விட முடியாது என்று அவர் தெரிவித்துள்ளார். ஏற்கனவே அதிமுகவில் பிரச்சனை அதிகரித்து வரும் நிலையில் தற்போது சசிகலா அவர்களும் இணைந்துள்ளது மேலும் சிக்கலை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Categories

Tech |