Categories
அரசியல்

ஓபிஎஸ்-ஐ ஓரங்கட்ட நினைத்தால்…. இது தான் கதி…. கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி…!!!

ஓபிஎஸ்-ஐ ஓரங்கட்ட நினைத்தால் அது தோல்வியில் முடியும் என்று அதிமுக மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி தெரிவித்துள்ளார்.

தன்னுடைய இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், ஏற்கனவே கட்சி தோற்றுப் போனதால் தொண்டர்கள் எல்லாம் ஆங்காங்கே சோர்வாக இருக்கிறார்கள். அந்த நேரத்தில் இந்த மாதிரியான ஒரு விஷயத்தை ஒருங்கிணைப்பாளர் விமர்சனம் செய்தால் கட்சிக்குத்தான் பலவீனம். முதல்கட்ட தலைவர்களை எல்லாம் பேசுவது என்பது தவறில்லை. இரண்டாம் நிலை தொண்டர்களை இரண்டாம் கட்ட நிலையில் இருப்பவர்களை விமர்சிப்பது என்பது கண்டனத்துக்குரியது.

அது மாதிரி பேசக்கூடாது. கட்சியில் யாராக இருந்தாலும் அவரை ஓரங்கட்ட நினைத்தால் தோல்வியில்தான் முடியும். உங்களுக்கு வெற்றியே கிடைக்காது. இன்று ஓபிஎஸ் பற்றி விமர்சனம் செய்கிறார்கள். அப்படியானால் இணை ஒருங்கிணைப்பாளர் என்ன செய்திருக்க வேண்டும் என்றால் கண்டன அறிக்கை வெளியிட்டு இருக்க வேண்டும். இப்படி பொதுவெளியில் பேச கூடாது என்று சொல்லி இருக்க வேண்டும். ஆனால் இரண்டு நாட்களாகியும் அமைதியாக இருக்கிறார். அவர் அமைதியாக இருக்க போய் தான் நாங்கள் ஓபிஎஸ்-க்கு சார்பாக பேசுகிறோம் என்று கூறியுள்ளார்.

Categories

Tech |