தமிழக முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்திற்கு ஆதரவாக இருப்பதாக கே.பி முனுசாமி கூறியுள்ளது திடீர் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் மாவட்டத்தில் உள்ள குடியாத்தம் பகுதியில் அதிமுக கட்சி நிர்வாகியின் இல்ல திருமண விழா நடைபெற்றது. இந்த திருமண விழாவில் அதிமுக கட்சியின் ஒருங்கிணைப்பாளர் கே.பி முனுசாமி கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சிக்கு பிறகு கே.பி முனுசாமி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் இருவராலும் நீக்கப்பட்ட புகழேந்தி தற்போது எந்த கட்சியில் இருக்கிறார் என்பதே தெரியவில்லை. அவருக்கு ஓபிஎஸ் பக்கம் நின்று கொண்டு கட்சியை விமர்சிக்க எந்த தகுதியும் கிடையாது. நான் பதவியை ராஜினாமா செய்கிறேன். நீங்களும் பதவியை ராஜினாமா செய்கிறீர்களா என்று ஓபிஎஸ் கேட்பது தலைமை கழக பேச்சாளர் பேசுவது போல் இருக்கிறது. ஒரு கட்சியின் தலைமை பொறுப்பில் இருந்தவர் போல் ஓபிஎஸ் பேசவில்லை.
ஒத்தைக்கு ஒத்தை பார்க்கலாம் என்று கூறிவிட்டு ஊரில் உள்ளவர்களை எல்லாம் கூட்டு சேர்கிறார் ஓபிஎஸ். அதிமுக கட்சியானது ஒரு தனிநபருக்கும், குடும்ப கட்டுப்பாட்டுக்கும் சென்று விடக்கூடாது. அதிமுக கட்சியில் சசிகலாவை சேர்க்கக்கூடாது என்று கூறியதே ஓபிஎஸ் தான். இப்போது சசிகலாவை சேர்த்து கொள்ளலாம் என்று கூறுவது எந்த விதத்தில் நியாயம். எவ்வித செல்வாக்கும் இல்லாத எடப்பாடி பழனிச்சாமி தான் இன்று தமிழகத்தின் ஆளுங்கட்சிக்கு எதிர்க்கட்சி தலைவராக மாறி இருக்கிறார். இதன் காரணமாகத்தான் ஆட்சியில் இருக்கும் தமிழக முதல்வர் ஸ்டாலின் மறைமுகமாக பல்வேறு விஷயங்களில் ஓ. பன்னீர் செல்வத்திற்கு உறுதுணையாக இருக்கிறார். நம்முடைய இபிஎஸ் அவர்களுக்கு மக்கள் செல்வாக்கு அதிகம் இருக்கிறது.
இதனால்தான் எடப்பாடி வளர்ந்து விடக்கூடாது என்பதில் அனைத்து கட்சியினரும் ஒன்று கூடி நிற்கின்றனர். அதோடு 30, 40 சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள், ஓபிஎஸ் பக்கம் சென்று விடுவார்கள் என்று ஆளும் கட்சியினர் புரளி கிளப்பி வருகிறார்கள். இந்த புரளி மூலம் தொண்டர்கள் மத்தியில் குழப்பங்களை ஏற்படுத்துகின்றனர். ஓ. பன்னீர்செல்வத்திற்கு ஆதரவாக இருக்கும் சில எம்எல்ஏக்கள் எடப்பாடி பழனிச்சாமி பக்கம் வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது. ஏனெனில் ஓ. பன்னீர் செல்வத்திற்கு செலவு செய்ய மனசே வராது.
எடப்பாடி பக்கம் தான் சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் இருக்கின்றனர் என்று கூறியுள்ளார். மேலும் ஏற்கனவே இபிஎஸ் பணத்தை கொடுத்து தான் நிர்வாகிகளை தன்னுடைய பக்கம் இழுத்துக் கொண்டதாக எதிரணியினர் புகார் தெரிவித்து வரும் நிலையில், அதை நிரூபிக்கும் விதமாக ஓ. பன்னீர் செல்வத்திற்கு செலவு செய்ய மனசே வராது என்று கூறியுள்ளது, எடப்பாடி பழனிச்சாமி பணத்தை கொடுத்து தான் தொண்டர்களை வாங்கியுள்ளார் என்பதை உறுதி படுத்துவது போல் இருப்பதாக அரசியல் வட்டாரங்கள் கூறுகிறது.