தமிழகத்தில் அதிமுகவில் உட்கட்சி பூசல் காரணமாக சமீப காலமாகவே பெரும் பிரச்சினைகள் நிலவி வருகிறது. தலைமை வகிப்பது யார் என்ற போட்டியில் ops-eps இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது. இந்நிலையில் ஓபிஎஸ்-க்கு பரபரப்பு நோட்டீஸ் அனுப்பி இபிஎஸ் தமிழக அரசியலில் புதிய பரபரப்பை கிளப்பியுள்ளார்.
நேற்று நடந்த ஆலோசனை கூட்டத்தில், “அதிமுக கட்சிக் கொடி, பெயர், லெட்டர் பேடை பயன்படுத்தியது குறித்து பயன்படுத்தியது ஏன்?, அது குறித்து உரிய விளக்கமளிக்க வேண்டும். இல்லையென்றால் சட்டநடவடிக்கை எடுக்கப்படும்” என்று ஓபிஎஸ்-க்கு அதிமுக தலைமை சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.