Categories
மாநில செய்திகள்

ஓபிஎஸ்-க்கு கிரீன் சிக்னல்….. அப்செட்டில் இருக்கும் இபிஎஸ்…. அ.தி.மு.க-வில் நடக்க போகும் அடுத்தடுத்த திருப்பங்கள்?…..!!!

மத்திய அரசில் ஆட்சிபொறுப்பில் உள்ள பா.ஜ.க-வுடன் கூட்டணியில் இருக்கும் அ.தி.மு.க, தலையில்லாமல் தட்டுத் தடுமாறிக் கொண்டிருக்கிறது. ஜெயலலிதா இறந்தவுடன் தொடங்கிய குழப்பம், எப்போது முடியும் என்ற திசையே தெரியாமல் பயணிப்பது போன்று அக்கட்சியின் பிரச்சனை இருக்கிறது. இதற்கிடையில் டெல்லியை சமாளித்து அ.தி.மு.க-வின் ஒற்றைத்தலைமையாக வந்துவிடலாம் என நினைத்த எடப்பாடி பழனிசாமிக்கும், அவரது ஆதரவாளர்களுக்கும் மேலிடம் இதுவரையிலும் சிவப்பு கம்பளம் விரிக்கவில்லை. அதற்கு மாறாக ஓபிஎஸ் எடுக்கக்கூடிய முடிவுகளுக்கும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. இதன் காரணமாக இதுவே ஓபிஎஸ்-க்கு ஆதரவாக மேலிடம் உள்ளதாக அ.தி.மு.க வட்டாரத்தில் பேச்சு எழுகிறது.

இதனிடையில் கொங்கு மண்டலத்தில் உள்ள பிரபல பா.ஜ,க தலைவர்கள் வழியாக மேலிடத்தை சரிக்கட்டும் முயற்சியும் பலனிக்காததால் எடப்பாடி அணி சோகத்தில் இருக்கிறது. எனினும் இதை வெளியில் காட்டிக்கொள்ளாமல் உள்ளுக்குள் புகைந்து கொண்டிருக்கிறார்களாம். அ.தி.மு.க சீனியர்களை பொறுத்தவரையிலும் நமது கட்சிக்குள் உள்ள குழப்பத்தை பயன்படுத்தி பா.ஜ.க வளரபார்க்கிறது என்பதை நன்கு அறிந்து வைத்திருக்கின்றனர். அ.தி.மு.க-வின் கோட்டை என கூறப்படும் கொங்கு மண்டலம்தான் பாஜகவின் டார்க்கெட். அவ்வாறு இருக்கும் சமயத்தில் எடப்பாடியை அ.தி.மு.க-வின் ஒற்றைத்தலைமையாக வரவிட்டால், கொங்கு மண்டலத்தில் பா.ஜ.க-வை எப்படி வளர்க்க முடியும்.? என்பது பா.ஜ.க மேலிடத்தின் கணக்கு ஆகும்.

இதன் காரணமாக எடப்பாடிக்கு எதிராகவும் இன்றி, ஆதரவாகவும் இல்லாமல் நாங்கள் கூறும் வழியில் செல்லுங்கள் என்பதே இப்போதைக்கு மேலிடத்தில் வந்திருக்கும் செய்தி என சொல்லப்படுகிறது. இதை எடப்பாடி அணி ரசிக்கவில்லை என்பதை நன்கு புரிந்துகொண்ட பா.ஜ.க மேலிடமும், ஓபிஎஸ்-க்கு கிரீன் சிக்னலை கொடுத்து விட்டதாம். இதனால் அடுத்தடுத்த மூவ்களை ஆரம்பிப்பதற்கு ஓபிஎஸ் தயாராகிக்கொண்டு இருக்கிறார். ஆகையால் அவர் எடுக்கும் நடவடிக்கையை பொறுத்துதான் இரட்டை இலையின் எதிர்காலமும் உள்ளது. ஒரு வேளை அ.தி.மு.க இணைந்து செயல்பட எடப்பாடி அணி இசைந்துவராவிட்டால், நாடாளுமன்ற தேர்தல் நெருக்கத்தில் சின்னத்தை முடக்கவும் எதிர் தரப்பு தயாராகவே இருக்கிறதாம். இதையே பா.ஜ.க-வும் எதிர்பார்ப்பதால், டெல்லி வரும் போது எங்கள் ஆட்டத்தை பாருங்கள் என்று காத்துக் கொண்டிருக்கிறார்களாம். அதே சமயத்தில் கொங்கு பகுதியில் வார வாரம் ஒரு கூட்டம், நிர்வாகிகள் சந்திப்பு என்பது படுஜோராக கள பணிகளை பா.ஜ.க செய்து கொண்டிருக்கிறது.

Categories

Tech |