முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி வீடு மற்றும் அவருக்கு தொடர்புடைய 60 இடங்களில் தமிழக லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று சோதனை நடத்தினர். அப்போது எஸ் பி வேலுமணி தங்கியிருந்த சேப்பாக்கம் எம்எல்ஏக்கள் விடுதியில் சோதனை நடத்தினர். இந்நிலையில் எஸ் பி வேலுமணி வீடு உள்ளிட்ட இடங்களில் இரண்டாவது நாளாக சோதனை நடைபெற்று வரும் நிலையில் ஓ. பன்னீர்செல்வம், பழனிசாமி தலைமையில் அதிமுக நிர்வாகிகள் சென்னையில் இன்று அவசர ஆலோசனை நடத்தி வருகின்றனர்.வேலு மணியைத் தொடர்ந்து அதிமுக வின் முக்கிய தலைவராக இருக்கும் ஓபிஎஸ், விஜயபாஸ்கர் மற்றும் ராஜேந்திர பாலாஜி உள்ளிட்டோர் வீட்டிலும் சோதனை நடைபெற உள்ளதாக தகவல் வெளி வருவதால் இது குறித்தும் ஆலோசிக்க வாய்ப்புள்ளது.
Categories