Categories
அரசியல்

ஓபிஎஸ்-க்கு வந்த புதிய சிக்கல்?…. அதிமுகவினர் கடும் அதிர்ச்சி….!!!!

ஜெயலலிதா மரணம் தொடர்பாக நேற்று (மார்ச் 8) நடந்த விசாரணையில் ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் அப்பல்லோ மருத்துவர் மதன்குமார் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தார். அதாவது ஜெயலலிதாவுக்கு மாரடைப்பு தான் ஏற்பட்டது. சிகிச்சை முறையில் மருத்துவ முறைகள் அனைத்தையும் நாங்கள் முறையாக பின்பற்றினோம் என்று மருத்துவர் மதன்குமார் பதில் அளித்துள்ளார்.

ஆறுமுகசாமி ஆணையம் சுமார் 154-க்கும் மேற்பட்டோரிடம் ஜெயலலிதா மரணம் தொடர்பில் விசாரணை நடத்தி விட்டது. இந்நிலையில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் சசிகலாவின் அண்ணன் மனைவி இளவரசி ஆகியோர் ஜெயலலிதா மர்ம மரணம் தொடர்பாக வரும் 21-ஆம் தேதி நடக்கும் விசாரணையில் நேரில் ஆஜராகும்படி சம்மன் அனுப்ப ஆறுமுகசாமி ஆணையம் முடிவு எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் அதிமுகவினர் கடும் அதிர்ச்சியில் உள்ளனர்.

Categories

Tech |