அதிமுக ஒற்றை தலைமுறை விவாகாரம் தலைதூக்கிய நிலையில் கட்சியை இரண்டாக இருக்கிறது. இதற்கிடையில் கடந்த 11ஆம் தேதி அதிமுக பொது கொழுக்கட்டத்தில் கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்டார். அதனை தொடர்ந்து கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்களை நீக்கினார். இதனால் அதிர்ச்சி அடைந்த ஓ.பன்னீர்செல்வம் எடப்பாடி தலைமையின் அறிவிப்புகள் செல்லாது என்றும் அவரை கட்சியிலிருந்து நீக்குவதாகவும் தெரிவித்தார். மேலும் எடப்பாடி பழனிச்சாமி கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளராக அங்கீகரிக்க கூடாது என்று தேர்தல் ஆணையம் மற்றும் நீதிமன்றத்தில் முறையிட்டுள்ளார். இதனால் எடப்பாடி பழனிச்சாமிக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் எடப்பாடி பழனிச்சாமிக்கு மேலும் குடைச்சல் கிடைக்கக்கூடிய வகையில் வி.கே. சசிகலாவுடன் இணைய ஓ.பன்னீர்செல்வம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதாவது, சசிகலாவுக்கு ஆதரவான கருத்துக்களை ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் தெரிவித்து வருவதாக கூறப்படுகிறது. இதனை உறுதிப்படுத்தக் கூடிய வகையில், தேனீ சென்ற அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனுக்கு ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர் சையது கான் உற்சாக வரவேற்பு அளித்தனர். சசிகலா, டிடிவி தினகரன் ஆகியோருக்கு எதிரான நிலைப்பாட்டை கொண்ட ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் தற்போது அவர்களுடன் நெருக்கம் காட்டுவது தமிழக அரசியல் வட்டத்தில் புயலை கிளப்பி உள்ளது. இதற்கிடையில் மூத்த அரசியல்வாதி பண்ருட்டி ராமச்சந்திரன் சென்னையில் நேற்று வி.கே.சசிகலா சந்தித்து பேசினார். அப்போது அதிமுக உட்கட்சி விவகாரங்கள் குறித்து பேசப்பட்டதாக கூறப்படுகிறது. இது அதிமுக வட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் சசிகலா ஆதரவாளரும் ஓ. பன்னீர்செல்வத்தின் சகோதரருமான ஓ.ராஜா சசிகலா-ஓ.பன்னீர்செல்வம் சந்திப்பை நடத்துவதற்கான வேலைகளில் திரைமறைவில் ஈடுபட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது. எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அவரது ஆதரவாளர்களுக்கு அதிர்ச்சி கொடுக்க சசிகலாவுடன் ஓ.பன்னீர்செல்வம் கைகோர்ப்பாரா என்பதை தற்போதைய ஹாட் டாபிக்காக உள்ளது.