Categories
அரசியல் மாநில செய்திகள்

ஓபிஎஸ் சொல்லி இருக்காரு…! நான் சொன்னா நல்லா இருக்காது… எனக்கும் இதே நிலை தான் …!!

 

செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயகுமாரிடம், “சசிகலாவை நீக்கி பொதுக்குழு தீர்மானம், மாவட்ட தீர்மானம் எல்லாமே நிறைவேற்றப்பட்டுள்ளது  என்று கூறினீர்கள் . ஆனால் தற்பொழுது ஓபிஎஸ் பரிசீலிக்க சொல்ல வேண்டிய காரணம் என்ன? ” என்று பத்திரிகையாளர் கேட்டனர். அதற்க்கு பதிலளித்த அவர், பொதுவாகவே வந்து ஒருங்கிணைப்பாளர்  கருத்து குறித்து விமர்சனம் செய்வது கட்சிக்குள் இருந்து விமர்சனம் செய்வதற்கு ஒரு ஆரோக்கியமான செயல் அன்று. நான் அதுக்குள் செல்ல விரும்பவில்லை.

அதை தான் நான் சொல்ல முடியும். கட்சியினுடைய நிலைப்பாடு என்ன? தெளிவாக சொல்லி இருக்கிறேன். கட்சியினுடைய நிலைப்பாடு நேற்றும் சரி, இன்றும் சரி, நாளையும் சரி சசிகலாவோ அவர்களை சார்ந்தவர்களுக்கோ அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தில் எந்தக் காலத்திலும் இடமில்லை.

அவரோடு தொடர்பு வைத்துக் கொள்பவர்கள் நீக்கப்படுவார்கள். ஒழுங்கு நடவடிக்கைக்கு உட்படுவார்கள் என்று முடிவெடுத்தது. அந்த முடிவுதான் நாளையும். ஓபிஎஸ் ஆலோசித்து முடிவெடுப்போம் என்று கூறுகிறார்.ஓபிஎஸ் ஒருங்கிணைப்பாளர். அவரை பொறுத்தவரையில் அவர் கருத்து சொல்வதற்கு நான் போய் எதிர் கருத்து சொன்னால் ஒரு கட்சிக்குள்ள அந்த மாதிரி எதிர் கருத்து சொல்வது எந்த விதத்திலும் அது முடியாது.

ஆனால் கட்சினுடைய நிலைப்பாடு என்ன? கட்சினுடைய நிலைப்பாடு பொறுத்தவரையில் ஓட்டுமொத்த மாவட்ட செயலாளர் சரி, ஒட்டுமொத்த தலைமை கழகமும் சரி,  கிளை கழகத்திலிருந்து மேல்மட்டம் வரையில் ஊராட்சியிலிருந்து நகராட்சி வரையில் ஒன்று பட்டு மாவட்டங்களில் தீர்மானங்கள் நிறைவேற்றி அந்த தீர்மானத்தின் அடிப்படையில் எந்த விதத்திலும் திருமதி சசிகலாவை சார்ந்தவர்களையும், சசிகலாவுடன் எந்த  தொடர்பையும் வைத்து கொள்ளக்கூடாது அவர்களை இணைக்க கூடாது என்பதாகும். இந்தநிலையை தான் நான் சொல்ல முடியும். அந்த நிலையில் தான் நானும் உள்ளேன். நாளைக்கு இதே நிலை தான் எனக்கும் என விளக்கினார்.

Categories

Tech |