Categories
அரசியல்

“ஓபிஎஸ் தரப்பினர் திருடி இருப்பார்கள் என நிரூபித்தால் நான் தற்கொலை செய்து கொள்ள தயார்”… கோவை செல்வராஜ் பேச்சு..!!!!

ஓபிஎஸ்ஐ முதலமைச்சராக்காமல் எடப்பாடி முதலமைச்சராக ஜெயலலிதா ஆக்கி இருந்தால் அம்மாவிற்கே துரோகம் செய்திருப்பார் எடப்பாடி மீண்டும் ஜெயலலிதாவிடம் முதலமைச்சர் பதவியை அளித்திருக்க மாட்டார் என கோவை செல்வராஜ் தேனியில் பேட்டியளித்து இருக்கின்றார். கோவை செல்வராஜ் பேசிய போது கட்சிக்காக ஓபிஎஸ் உழைக்காவிட்டால் நான்கரை வருடங்கள் இபிஎஸ் முதல்வராக இருந்திருக்க முடியாது சசிகலாவால் முதல்வரான இபிஎஸ் சசிகலாவை கட்சியை விட்டு நீக்கியது துரோகமா அதிமுக ஆட்சி நடைபெற வேண்டும் என்பதற்காக முதல்வர் பதவியை சசிகலாவிற்கு விட்டுக் கொடுத்தது துரோகமா இபிஎஸ் கட்சியை கைப்பற்றி கம்பெனி நடத்த முயற்சி செய்கின்றார்.

மேலும் ஜெயலலிதா மரணம் படுகொலை ஒரு காலத்திற்குள் இபிஎஸ் பக்கம் இருக்கும் நிர்வாகிகள் ஓபிஎஸ் பக்கம் சேர்ந்து ஓபிஎஸ் தலைமையில் கட்சி வழிநடத்தி செல்லப்படும். கட்சியையும் தொண்டர்களையும் காப்பாற்ற ஓபிஎஸ் என்ற பாயும் புலி ஓபிஎஸ் உழைக்காவிட்டால் ஒரு நாள் கூட இபிஎஸ் முதல்வராக இருந்திருக்க முடியாது. மேலும் ஓபிஎஸ் கட்சியை கைப்பற்றி கம்பெனி நடத்த முயற்சி செய்கின்றார். அதனால் ஜெயக்குமார் போன்ற ஆட்கள் இனிமேல் கட்சியில் தலை தூக்க முடியாது தலைமை செயலகத்தின் பூட்டை உடைத்து உள்ளே உள்ள பத்திரங்களை களவாடி சென்றிருப்பதாக இபிஎஸ் தெரிவித்துள்ளார். பத்திரங்களை என்ன வெளியிலா  போட்டிருப்பார்கள். லாக்கரில்  இருந்த பத்திரங்கள் காணவில்லை என்று கூறுவது அபத்தமான பொய்யாகும். அதனை ஓபிஎஸ் தரப்பினர் தெரிவிப்பார்கள் என நிரூபித்தால் தான் தற்கொலை செய்து கொள்ள தான் தயார் என கோவை செல்வராஜ் கூறியுள்ளார். மேலும் அவர் பேசும் போது அவருடைய சுய லாபத்திற்காக எடப்பாடி கட்சியை கைப்பற்ற நினைக்கின்றார் என நீதிமன்ற தீர்ப்பு வந்தபின் அவர் அரசியலை விட்டு சென்றிருக்க வேண்டும்.

அவ்வாறு செய்யாமல் மீண்டும் கட்சியை கைப்பற்றி ஒரு கம்பெனி நடத்த நினைப்பது என்பது எடப்பாடி ரோஷம், சூடு சொரணை இல்லாதவர்கள் என்பதை நிரூபிக்கின்றது என தெரிவித்துள்ளார். தொடர்ந்து பேசியவர் 2023ல் அனைவரையும் ஒன்றிணைத்து ஒற்றை தலைமையில் ஓபிஎஸ் கட்சியில் வழி நடத்தி வரும் தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் அதிமுக ஆட்சி அமையும் என கோவை செல்வராஜ் கூறியுள்ளார்.

Categories

Tech |