அதிமுகவில் ஒற்றை தலைமை குறித்து அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தனித்தனியாக ஆலோசனை நடத்தி வருகின்றன. இதனால் அதிமுகவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேட்டி அளித்தார்.
அதில், ஒற்றை தலைமையை ஈபிஎஸ் ஏற்க வேண்டும் என்பதே பெரும்பாலான தொண்டர்களின் விருப்பம். ஓ.பன்னீர்செல்வம் தவறுக்கு மேல் தவறு செய்து தவறான பாதையை நோக்கி சென்று இருக்கிறார். அதிமுக ஜனநாயகம் மலர்ந்த அமைப்பு. எனவே இங்கு அராஜகத்திற்கு இடம் இல்லை. மேலும் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் பொதுக்குழுவில் பங்கேற்பார் என்று நம்பிக்கை உள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார்.